search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருடப்பட்ட ஐம்பொன் சிலைகள் மீட்பு"

    செஞ்சி அரசூக ஜெயின் கோவிலில் திருடப்பட்ட ஐம்பொன் சிலைகள் காட்டுப்பகுதியில் கிடந்தன. அதை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பெரும்புகை கிராமத்தில் பழமை வாய்ந்த பகவான் மல்லிநாதர் ஜெயின் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு அறையில் பல கோடி மதிப்புள்ள 35 ஐம்பொன் சாமி சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் கடந்த மாதம் 16-ந் தேதி மர்ம மனிதர்கள் சிலர் இந்த கோவிலுக்குள் புகுந்தனர். அங்கிருந்த 6 ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். அவற்றின் மதிப்பு ரூ.2 கோடியாகும்.

    இந்த கொள்ளை குறித்து செஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடிவந்தனர்.

    இந்த நிலையில் செஞ்சி அருகே அனந்தபுரம் செல்லும் வழியில் அத்தியூர் என்ற காட்டுப்பகுதி உள்ளது. அந்த இடத்துக்கு சுரேஷ் என்பவர் சென்றார். அங்கு சாமி சிலைகள் கிடந்தன. அதனை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அவர் இது குறித்து அனந்தபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் சிவராஜ் மணிகண்டன், சப்- இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் காட்டுப் பகுதிக்கு விரைந்து சென்றனர்.

    அங்கு 4 ஐம்பொன் சிலைகள் கிடந்தன. அதில் 3 புத்தர் சிலைகளும், ஒரு காமாட்சி அம்மன் சிலைகளும் இருந்தது. போலீசார் அந்த சிலைகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்த சிலைகள் பெரும்புகை ஜெயின் கோவிலில் திருடப்பட்டவை என்பது தெரிய வந்தது. அந்த சிலைகளை காட்டுப்பகுதியில் வீசி சென்றவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×